இனி எனது கையெழுத்து தமிழில் மட்டுமே! அதிரடி காட்டும் இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதில் மட்டுமள்ளாது தற்போது பிசியான நடிகராகவும்.வலம் வருகிறார். அவரது நடிப்பில் மட்டுமே தற்போது அரை டஜன் படங்கள் முடிந்து வெளியீட்டிற்க்கு தயாராகி வருகிறது.

இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்தின்  மீதும் அக்கரை கொண்டவராக அவ்வபோது காட்டி வருகிறார். ஜல்லிகட்டு பிரச்சனை, நீட் எதிர்ப்பு என பல சமயங்களில் தனது சமூக நிலைபாட்டை வெளிப்படையாக கூறிவருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இனி எனது கையெழுத்து தமிழில் மட்டுமே இருக்கும் என தெரிவித்து தனது தமிழ் கையெழுத்தையும் போட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment