குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு

பேரவைக்குள் குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில்  பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் , ” குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் “ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ,மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நோட்டீஸ்க்கு விதித்த இடைக்காலத் தடையை நீக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சட்டப்பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் ,உரிமைக்குழு அனுப்பிய 2-வது நோட்டீஸூக்கு விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல்  செய்துள்ளார்,நோட்டீஸ் மீதான தடையை நீக்க கோரும் மனு  விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

45 mins ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

2 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

8 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

14 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

16 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

17 hours ago