#BREAKING: ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வு – மத்திய நிதி அமைச்சகம்

2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தகவல்.

ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடுகள் ரூ.86,912 கோடியை மாநில அரசுகளுக்கு நேற்று விடுத்திருந்தது.

மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட ரூ.86,912 கோடியில், ரூ.47,617 கோடி மதிப்பிலான இழப்பீடு ஜனவரி மாதம் வரையிலும், ரூ.21,322 கோடி பிப்ரவரி-மார்ச் வரையிலும், ரூ.17,973 கோடி ஏப்ரல்-மே வரையிலும் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விடுவித்துள்ள இந்த தொகையில் தமிழகத்திற்கு ரூ.9602 கோடி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வருவாய் கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021 மே மாதத்தை விட தற்போது 44% ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வசூல் 41% உயர்ந்து, ரூ.7,910 கோடியாக அதிகரித்துள்ளது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை மாநிலங்களுக்கு, நேற்று மத்திய அரசு பிரித்து கொடுத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment