அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி மாணவர்களுக்கு உதவித் தொகை – மத்திய அமைச்சரவை

அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் காணொலி மூலம் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் 4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 11-ஆம் வகுப்பு முதல் எந்த உயர்கல்வியையும், அரசின் உதவித் தொகையுடன் பட்டியலின மாணவர்கள் பயில முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டிடிஎச் நிறுவனங்களுக்கான புதிய வழிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டிடிஎச் உரிமம் இனி 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை லைசென்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். இதனிடையே, எஸ்.சி. மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகையாக ரூ.59 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்