ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 9-ஆம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.  இதனையடுத்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டமானது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

 இந்த நிலையில், இன்று முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் நிலையில், தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment