“எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது”- ராகுல் காந்தி

இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாற்றினார்.

இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு போர் நடைபெற வாய்ப்புள்ளதால், இரு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என பதிவிட்ட அவர், எல்லையில் நடப்பது குறித்து வெளிப்படைத் தன்மை தேவை என அந்த பதிவில் கூறினார்.