கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே உடலுக்கு அரசு மரியாதை – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் 52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று காலமானார். வார்னேவுக்கு, உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு, இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். ஷேன் வார்னேவுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த மனிதர்களில் வார்னேவும் ஒருவர் என்று புகழாரம் சூட்டினார்.

இதனிடையே, மறைந்த ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேக்கு மரியாதை செலுத்தும் விதமாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் மைதானத்தில் உள்ள ஸ்டேடியத்தின் ‘the great southern stand’ என்ற பெயரை மாற்றி ‘ஷேன் வார்னே Stand’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்