நீலகிரியில் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் .!

நீலகிரி மாவட்டத்தில் வரும் 4ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் 40 நாள்கள் அதாவது மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என மத்திய அரசுகள் அறிவித்துள்ளது. இதனால், பலஅரசு அலுவலகங்கள் இயங்காமலேயே இருந்தது. நாளை மறுநாள் ஊரடங்கு முடியுள்ளதால் 4-ம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம் போல் இயங்கும் எனக் கூறுப்படுகிறது.

Image

இந்நிலையில்,  நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த 26.3.2020 முதல் வரும் 3.5.2020 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் பாதிப்பு ஏதும் இல்லாத காரணத்தினால் தமிழக அரசின் உத்தரவுப்படி, வரும் 4-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் அனைத்து அலுவலர்களை கொண்டு வழக்கம் போல் செயல்படும் எனசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk