ரூ.1,610 கோடி நிவாரண திட்டத்தை அறிவித்த- கர்நாடக அரசு.!

மலர் விவசாயிகளுக்கு ஒரு முறை ஹெக்டேருக்கு ரூ .25000 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

நாடுமுழுவதும் பரவிய கொரோனாவால் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களின் நலனுக்காக 1,610 கோடி ரூபாய் நிவாரண திட்டத்தை கர்நாடக அரசு இன்று அறிவித்தது. அதில், விவசாயிகள்,  ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 230,000 முடிதிருத்தும் நபர்களுக்கும், 775,000 ஓட்டுநர்களுக்கும், 7.75 லட்சத்துக்கும் மேற்பட்ட  ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களுக்கு தலா ரூ .5000 மேலும், மலர் விவசாயிகளுக்கு ஒரு முறை ஹெக்டேருக்கு ரூ .25000 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.

 

கர்நாடகாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ரூ .2000 அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அவர்களின் நன்மைக்காக கூடுதலாக ரூ .3000 கூடுதல் நிவாரணம் வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் 15.80 லட்சம் கட்டிடத் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk