அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் – ராமதாஸ்

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,மருத்துவ நிகர்நிலை பல்கலைகழக கட்டணத்தை குறைக்கவும், கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிகர்நிலைப் பல்கலைகழகங்களுக்கு  மட்டும் நீட் தேர்வை கட்டாயமாக்கி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.