கூகுளின் புதிய விதி : அனைத்து கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கும் தடை…!

call recording

கூகுள் நிறுவனம் தற்போது உருவாகியுள்ள புதிய விதிகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்துபவர்கள் இனி தங்கள் போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக தங்களுக்கு வரக்கூடிய மற்றும் தாங்கள் அழைக்கக்கூடிய கால்களில் ரெக்கார்டு செய்ய முடியாதபடி வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக பலர் தங்களது மொபைல்களில் கூகுள் ப்ளே மூலமாக கால் ரெக்கார்ட் அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து, அதன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்து வந்தனர். இதன் மூலம் பயனாளர்களின் பிரைவசி மற்றும் டேட்டா ஆகியவை கேள்விக் குறியாக இருப்பதால் கூகுள் பிளேயிலுள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கும் கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது.

அதன்படி ட்ரூகாலர் நிறுவனமும் தங்கள் அப்ளிகேஷன் மூலமாக கால் ரெக்கார்டு செய்யும் ஆப்ஷன் இனி கிடையாது என தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக பேசியுள்ள ட்ரூகாலர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இனிமேல் கூகுள் நிறுவனத்தின் புதிய விதியால் ட்ரூ காலர் செயலி கால் ரெக்கார்டிங் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல முன்னதாகவே கால் ரெக்கார்டிங் செய்வதற்கான அப்ளிகேஷன்களை மொபைல்களில் டவுன்லோட் செய்து வைத்து இருந்தாலும் அவையும் இனி பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி போன்களிலுள்ள ஆப்ஷன் மூலம் மட்டுமே கால் ரெக்கார்டிங்க் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.