கூகிள்-ன் டுப்லெக்ஸ் மூடப்பட்டது..! டிசம்பர் 2022 முதல் ஆதரிக்கப்படாது ..!

கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டுப்லெக்ஸ் தொழில்நுட்பமானது இந்த டிசம்பர் மாதம் முதல் மூடப்படுகிறது.

ஆர்டிபிசியல் இன்டெலிஜெண்ட் தொழில்நுட்பம் (AI) மூலம் இணையத்தில் இயங்கி வரும் டுப்லெக்ஸை இந்த மாதத்தில் இருந்து மூடுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் டுப்லெக்ஸ் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அம்சங்களும் ஆதரிக்கப்படாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019- ஆண்டு நடைபெற்ற ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் போது டுப்லெக்ஸ் தொழிநுட்பத்தை திரைப்பட டிக்கெட்களை இணையத்தில் புக் செய்வது போன்ற பல தானியங்கு செயல்களை செய்வதற்காக அறிமுகப்படுத்தியது. மேலும் தரவுநிலைகளில் பயனர்களின் கடவுச்சொல்லை தானாக மாற்றுவது, மின்வணிக சில்லறை விற்பனையாளர்களுக்கான உதவி செக்-அவுட், விமான தளங்களுக்கான விமான சோதனைகளை கண்டறிய பயன்பட்டு வந்த இந்த தொழிநுட்பமானது தற்பொழுது மூடப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment