சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்!

சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்!

சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்.

தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இன்று உலகே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் பத்ம பூஷன் விருதை வழங்கினார்.

இது குறித்து சுந்தர் பிச்சை கூறுகையில், நான் எங்கு சென்றாலும் எனது இந்திய அடையாளத்தை சுமந்து செல்கிறேன்.இந்தியா என்னில் ஒரு பகுதி, இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை உருவாக்கிய தேசத்திடம் இருந்து எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை சேர்த்துள்ளீர்கள். நான் எனது வாய்ப்புகளைத் தேடிப் பயணிக்க என் பெற்றோர் நிறைய தியாகம் செய்தனர். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததில் எனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார்.,

இதனிடையே, 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் இந்திய அரசு அறிவிதத்து. அந்த சமயத்தில் 4 பேருக்கு பத்ம விபூசன் விருதும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 117 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டன. அப்போது, அந்த விருதை சுந்தர் பிச்சை நேரில் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இதனால், விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, சுந்தர் பிச்சையிடம் வழங்கினார்.

சுந்தர் பிச்சையிடம் விருது வழங்கிய பின் பேசிய இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து, சுந்தர் பிச்சையிடம் பத்ம பூஷனை ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. இந்தியா-அமெரிக்கா பொருளாதாரம் & தொழில்நுட்பத்தை வலுப்படுத்த, மதுரையிலிருந்து மவுண்டன் வியூ வரையிலான அவரது உத்வேகப் பயணம். உறவுகள், உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்திய திறமைகளின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *