குட் நியூஸ்.! அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் தொடங்கும்.! கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.!

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டனர்.
  • இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்ம் ஒன்றில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. அவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர் எச்.வி ஹன்டே, சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் விரைவில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் ஒரு வாரத்திற்கு 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். தொடர்ந்து விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும், அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பின்னர் நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் எனவும், உறுதிபட கூறினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்