வாரிசுகளுக்கு மகிழ்ச்சி செய்தி.! கொடுத்தது கொடுத்ததுதான்.. NO ரிடடர்ன்.! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.!

கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

ஒருமுறை வழங்கிய சொத்தை பாதுகாவலர் (கார்டியன்) திரும்ப பெற முடியாது என வாரிசுகளுக்கு வழங்கும் சொத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் வழங்குபவரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 23-இன் கீழ், சொத்து பரிமாற்றம் செல்லாது என அறிவிக்க 2 அத்தியாவசிய முன்நிபந்தனைகள் உள்ளன என்று நீதிபதி ஆர் சுப்ரமணியம் கூறியுள்ளார். முதல் நிபந்தனை என்னவென்றால், சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பரிமாற்ற ஆவணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது நிபந்தனையாக இடமாற்றம் செய்பவர் வகிக்க வேண்டிய பொறுப்பு சரி செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த இரண்டு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் ஆவணங்கள் செல்லாது என்று கூறி எஸ்.செல்வராஜ் சிம்சன் என்பவர் தொடர்ந்த ரிட் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். அந்த மனுவில், தன் மகன் மீதான புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு அம்பத்தூரில் உள்ள ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார்.

இருப்பினும், மனுதாரர் தனது மகனிடமிருந்து ஜீவனாம்சம் கோரினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சிவில் நீதிமன்றத்தில் சொத்து பரிமாற்ற ஆவணத்தை ரத்து செய்யக் கோரிக்கை வைக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். அதுவும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு நலச் சட்டத்தின் கீழ், அவர்களை பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டு இருந்து, அதில் பராமரிப்பு தீர்ப்பாயம் திருப்தி அடைந்தால் மட்டுமே அத்தகைய சொத்து பரிமாற்றத்தில் மோசடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment