குட்நியூஸ்..!மீண்டும் 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 332  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,77,113 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1300 குறைவு.மேலும்,266 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,43,77,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 332 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,61,389 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,982 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,37,75,086 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25% ஆக அதிகரிப்பு.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,40,638 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.263 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 1,09,08,16,356 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 59,08,440 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.