2-வது நாளாக உயரும் தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ..?

Gold Price: சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :- #BREAKING: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். நேற்றைய நாளில் தங்கத்தின் விலையானது உயர்ந்து விற்பனையான நிலையில் தற்போது இன்றைய நாளிலலும் தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

சென்னையில் (20.03. 2024) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.49,120-க்கும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து 30 காசுகள் குறைந்து கிராமுக்கு ரூ.80-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.300 குறைந்து ரூ.80,000-க்கு விற்பனையாகிறது.

Read More :- திமுகவை முந்திய அதிமுக..  எந்தெந்த தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?  

சென்னையில் (19.03. 2024) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குரூ.49,080-க்கும் கிராமுக்கு ரூ.6,115-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.80.30-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.