தினமும் ரூ.80 குறையும் தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன.?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

கடந்த வாரம் உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை மெல்லமெல்ல குறையத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதாவது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தினமும் 80 ரூபாய் சரிந்து வருகிறது.

சென்னையில் இன்று (11. 01. 2024) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 ரூ.46,480க்கும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், கிராம் ரூ.77.50க்கும் விற்பனையாகிறது.

உற்சாகத்தில் முருக பக்தர்கள்! அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா – இன்று முதல் விண்ணப்பம்!

சென்னையில் நேற்று (10. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் 5,820 ரூபாய்க்கும், ஒரு சவரண் 46,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் 77 ரூபாய் 50 காசுகளுக்கும் 1 கிலோ 77,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.