ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மானவர்களுக்கு ஆணலாய்ன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் ஆன்லைன் வகுப்புகள் செல்லாது என்று  இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் என்பவர் அனைத்து மருத்துவ கல்லூரிகளின்  முதல்வர்களுக்கும் எம்.சி.ஐயின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அயல்நாட்டு மருத்துவ  பல்கலைகழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புகளுக்குத்தான் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  ஆனால், இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா காலத்தில் ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பேரிடர் உள்ள தற்போதைய நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்றும், கொரோனா  பேரிடர் முடிவுக்கு வந்தபின் கல்லூரிகள் திறக்கப்படும்போது பிராக்டிகல் மற்றும்  கிளினிகல் பயிற்சி நடத்தி வகுப்புகளை சமன் செய்து  கொள்ளலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.