பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்த கோவா! புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று!

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பசுமை மண்டலம் என்ற நிலையை இழந்தது கோவா.

உலக அளவில், இதுவரை 4,429,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 298,165 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ள நிலையில், இதுவரை இந்த வைரசை அழிப்பதற்கான எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. 

 இந்நிலையில், கோவாவில்   ஒருமாத காலமாக கொரோனா இல்லாமல் இருந்துள்ளது. தற்போது மஹாராஷ்டிராவில் இருந்து, கோவாவுக்கு வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டு முதல்வர் பிரமோத் சாவந்த் அவர்கள் கூறுகையில்,  கோவாவில் புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 7 பேரும் வெளியில் இருந்து வந்தவர்கள் தான். எனவே வைரஸ் பரவும் என மக்கள் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.