மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும் – பிரதமர் மோடி

மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, 50%-க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள், மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள குழப்பத்தை உள்ளூர் தலைவர்கள் மூலம் தீர்க்க வேண்டும்  என்றும், மாவட்டங்களில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 100 கோடி தடுப்பூசி போட்டதால் அலட்சியமாக இருந்தால் புதிய நெருக்கடி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.