பெங்களூரில் இருந்து மாலத்தீவுக்கு 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது..

பெங்களூரில் இருந்து மாலே (மாலத்தீவு) நோக்கி 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஜின் அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கோவை விமான நிலையத்தில் இன்று மதியம் 12 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கோயம்புத்தூர் வான்வெளியைக் கடக்கும்போது ஜி843 விமான பைலட் ‘மேடே’ அழைப்பு விடுத்ததால் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சியால்) ஏடிசி இந்த அருகிலுள்ள விமான நிலையமான கோயம்புத்தூருக்கு விமானத்தை இயக்கிய அறிவுறுத்தியது.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கோ பர்ஸ்ட் எமர்ஜென்சி நிலையை எதிர்கொண்டதால் அங்கு முழு அவசர நிலை ஏற்படுத்தப்பட்டு, ஓடுபாதையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இதர மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

author avatar
Dhivya Krishnamoorthy

Leave a Comment