2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் – சோனியா காந்தி அழைப்பு!

2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சற்று முன் ஆலோசனை நடத்தினர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைக் கட்சி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தேர்தலுக்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும் என்றும் எதிரிக்கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரே சிந்தனையில் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜக-வை தோற்கடிக்கும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்