ஜார்ஜியா செனட் தேர்தல்…கூடுதல் பலம் பெற்ற ஜோ பைடன்..! ஏன் தெரியுமா ..?

அமெரிக்க தேர்தலில் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் அதிபர்  கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பது பெரிதாகவோ பார்க்கப்படுகிறது. இரண்டு சபைகளில் ஏதாவது ஒன்றில் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் இருந்தால் அதிபர் தான் நினைத்ததை செயல்படுத்தவது கடினம்.

ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனின் ஜனநாயக கட்சி இந்த இரண்டு சபையிலும் அதிகத்தை செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி இரண்டும் போதிய வாக்குகளை பெறாததால் நேற்று மீண்டும் மறு தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி கட்சியை சார்ந்த வார்னாக் மற்றும் ஜான் ஓசோஃப் 2 பேர் வெற்றி பெற்றதால், செனட்டில் ஜனநாயக கட்சியின் பலம் 48 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அதிகம் செலுத்தி வந்த குடியரசு கட்சியின் பலம் 52-லிருந்து 50 ஆக குறைந்தது. இதனால், செனட் சபையில் குடியரசு கட்சி பின்னடைவை சந்த்தித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு செனட் சபை ஜனநாயக கட்சியின் கைக்கு வந்துள்ளது.

மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் தான் செனட் சபை நடக்கும் என்பதால், தற்போது தேர்வாகியுள்ள அதிபர் ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் எளிதாகவே வெற்றிபெறும்.

author avatar
murugan