25- வது நாள் கொண்டாட்டம்.! ‘கட்டா குஸ்தி’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷ்ணு விஷால் , நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள்.

GattaKusthi Completes 25 Successful Days
GattaKusthi Completes 25 Successful Days Image Source Twitter

கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது. 25 நாட்கள் ஆகியும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிது. பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

  இதையும் படியுங்களேன்- கனவு நினைவாகிவிட்டது…அண்ணனை பாத்துட்டேன்…கண்கலங்கிய செம்பருத்தி பார்வதி.!

GattaKusthi
GattaKusthi Image Source Twitter

படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, படம் வெளியான 24 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.  ஆம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 22 கோடிகள் வசூல் செய்து பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

GattaKusthi BO
GattaKusthi BO Image Source Twitter

குறைவான பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் லாபத்தை ஈட்டியுள்ளது. எனவே படம் மிக்பெரிய பிளாக் பஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. படம் வெளியாகும் முன்பே படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment