அரை கிலோ பிளாஸ்டிக் தந்தால் வயிறு நிறைய சாப்பாடு! அசத்தும் சத்தீஸ்கர் உணவகம்!

நாடு முழுவதும் ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு சேவையில் ஒரு உணவகம் இணைந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் எனும் ஊரில் இயங்கி வருகிறது கார்பேஜ் காஃபே எனும் உணவகம். இந்த உணவகத்தில் குறைந்த பட்சம் அரை கிலோ நெகிழியை (பிளாஸ்டிக் ) கொடுத்தால் உணவுக்கு பணம் தர தேவையில்லை. இதனால் இந்த ஹோட்டலுக்கு மக்கள் அதிகமாக தங்கள் வீட்டில் இருக்கும் நெகிழியோடு வந்து உணவு உண்டு செல்கின்றனர்.
அம்பிகாபூரை நெகிழி இல்லாத சுத்தமான இடமாக மாற்றவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்த ஹோட்டல் உரிமையாளர் கூறியுள்ளார். நெகிழியை ஒழிக்க முனைந்துள்ள இந்த அசத்தல் ஹோட்டலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.