G20 India : டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

By

Tamilnadu CM MK Stalin

இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 மாநாடு இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த  உலகக் தலைவர்களை, சிவப்பு கம்பலத்தில் நின்று வரவேற்றார்.பின்  அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மாநாடு முடிந்த பின்பு, இன்று இரவு 7 மணிக்கு ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் உலக நாட்டின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்றடைந்தார்.