இன்று முதல்…தடுப்பூசி போடவில்லையென்றால் வகுப்பறையில் அனுமதி இல்லை!

சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பறையில் அனுமதி இல்லை.

இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக,இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்றும்,தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்பில் அனுமதி இல்லை என்றும் சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே,கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக்கூடாது எனவும்,கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு சேவைகளை அணுகுவதைத் தடை செய்யும் உத்தரவுகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசகளையும், தனியார் நிறுவனங்களையும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட நிலையில், தடுப்பூசி போடப்படாத மாணவர்கள் இன்று முதல் வகுப்பறையில் அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சுகாதாரத் துறை, கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து, மே 15 ஆம் தேதிக்குள் 12-18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கான தனது முயற்சிகளைத் தொடரும்.மேலும்,சண்டிகரில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி பற்றி குழந்தைகளுக்குக் கற்பிக்குமாறும்,மேலும் தாமதமின்றி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமாறும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.