இந்தெந்த மாவட்டங்களில் மே 31 வரை இலவச உணவு.!

பொதுமுடக்கம் நீட்டிப்பால் இலவச உணவு தருவதும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4 ஆம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கொரோனா மற்றும் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் மக்களுக்காக பல்வேறு தரப்பினர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றன. மேலும், வறுமையில் வாடும் மக்களுக்கு சில மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சேலம், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் மே 31 வரை இலவச உணவு வழங்கப்படும் என்றும் பொதுமுடக்கம் நீட்டிப்பால் இலவச உணவு தருவதும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள 654 அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கி வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்