ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு..?

மேட்டூர் அணையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குறுவை பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12-ம் தேதி அணையைத் திறக்க வேண்டும் டெல்டா விவசாயிகள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, 8 ஆண்டுகளாகக் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையில் போதிய  நீர் இல்லாததால் 8 ஆண்டுகளாக தண்ணீர்  திறக்கப்படவில்லை.

இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட் ,செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாகஉள்ளது.  குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, இன்று   மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் மேட்டூர் அணை நீர் திறப்பது தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
Dinasuvadu desk