மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணையும் சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன்.!

‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டது. அதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

இதனால் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தலைமை நிர்வாகி அதிகாரி பதவியில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டதும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஓபன் ஏஐ முன்னாள் சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் இணை நிறுவனர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து, புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சி குழுவை வழிநடத்துவார்கள் என மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா கூறி உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்ட நாதெல்லா, “OpenAI உடனான எங்கள் கூட்டாண்மைக்கு நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றும் எங்கள் தயாரிப்பு வரைபடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், மைக்ரோசாஃப்ட் இக்னைட்டில் நாங்கள் அறிவித்த அனைத்தையும் தொடர்ந்து புதுமைப்படுத்துவதற்கான எங்கள் திறன் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களைத் தொடர்ந்து ஆதரிக்கிறோம்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் AI சாட் போட்.! மெட்டா நிறுவனம் அசத்தல்.!

எம்மெட் ஷியர் மற்றும் ஓஏஐ-இன் புதிய தலைமைக் குழுவைப் பற்றி அறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம். சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன், சக ஊழியர்களுடன் சேர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்து புதிய மேம்பட்ட ஏஐ ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தப் போகிறார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”

“அவர்களின் வெற்றிக்குத் தேவையான வளங்களை அவர்களுக்கு வழங்குவதற்கு விரைவாகச் செல்ல நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சாம் ஆல்ட்மேன், அந்த பதிவை குறிப்பிட்டு ‘பணி தொடர்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சாட் ஜிபிடி’ எனும் சாட் போட்டால் தொழில்நுட்ப உலகில் பல மாற்றங்கள் வந்ததையடுத்து, சாம் ஆல்ட்மேன் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.