இ-பதிவு சந்தேகங்களுக்கு ‘1100’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்..!

இ-பதிவு குறித்த சந்தேகங்களை மக்கள் அறிந்து கொள்ள 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகின்ற 24-ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதி வழங்கபப்ட்டுள்ளது. மேலும், தேவையில்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது.

அதிலும், குறிப்பாக பலர் திருமணத்தை காரணமாக காட்டி  வைத்து இ-பதிவு செய்து  வெளியே சுற்றுவதால் இ-பதிவில் இருந்து திருமண நிகழ்வு நீக்கப்பட்டது. பின்னர்,  பல கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு முறையில் சேர்க்கப்பட்டது.

ஆனாலும், பலருக்கு இ-பதிவு முறையில் சந்தேகங்கம் எழுந்து வரும் நிலையில்,
இ-பதிவு குறித்த சந்தேகங்களை மக்கள் அறிந்து கொள்ள 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

author avatar
murugan