விழுப்புரத்தை தொடர்ந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த முதல்வர்..!

செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர்  சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து,  செங்கல்பட்டிலும் கள்ள சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையில் கள்ள சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.