சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன்காரணமாக இந்த 4 மாவட்டங்களிலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை பொறுத்தவரை மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை.. இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை – முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சென்னையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, மீட்புப்பணிகள் நிறைவடையாததால், காஞ்சிபுரத்தில் இரண்டு பகுதிகளில் மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.