புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் அதிரடி கைது…காரணம் என்ன தெரியுமா.?

புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் அதிரடி கைது…காரணம் என்ன தெரியுமா.?

Jagadeesh Prathap Bandari

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிக்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த நடிகர் ஜெகதீஷ் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை நடிகை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்தபோது அதனை புகைப்படம் எடுத்து நடிகர் ஜெகதீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த நடிகை கடந்த மாதம் 29ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜெகதீசனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்

தற்போது, புஷ்பா பட துணை நடிகர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, புஞ்சகுட்டா காவல்துறை விசாரணையில், உயிரிழந்த  பெண்ணை ஜெகதீஷ் ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

அந்த புகைப்படத்தை வைத்து ஜெகதீஷ் அந்தப் பெண்ணை மிரட்டியதாகவும், மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், அந்த பெண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு பற்றிய கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கின்றது.

மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!

நடிகர் ஜெகதீஷ் கடைசியாக மைத்ரி மூவி மேக்கர்ஸின் சிறிய பட்ஜெட் நாடகமான சத்திகானி ரெண்டு யேகராலுவில் நடித்தார். அவர் அடுத்ததாக நிதின் மற்றும் ஸ்ரீலீலாவின் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் கிராமிய நாடகமான அம்பாஜிபேட்டா மேரேஜ் பேண்டில் நடித்துள்ளார்.

Join our channel google news Youtube