ரவா உப்புமா உதிரியாக வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

ரவா உப்புமா-   ரவை உப்புமா உதிரியாக வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:

  • ரவை =கால் கிலோ [1 கப் ]
  • எண்ணெய் =5 ஸ்பூன்
  • வெங்காயம் =2
  • பச்சை மிளகாய் =3
  • கடலை பருப்பு =1 ஸ்பூன்
  • கடுகு =1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்த்து முதலில் லேசாக வறுக்கவும் .பிறகு அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்  நிறமாக வரும் வரை வறுக்கவும்  அப்போதுதான் ரவை ஒட்டாமல் உதிரியாக வரும்.

பிறகு இதை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில்  ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலைப்பருப்பை சேர்க்கவும் . கடலைப்பருப்பு பொன்னிறமாக வந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் ,வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தால் போதுமானது. அப்போதுதான் உப்புமா சுவையாக இருக்கும். பிறகு அதில் ரவையை கொட்டி  ஒரு நிமிடம் கலந்து விட்டு   இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் ,

தண்ணீர் வற்றும்   வரை கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு நிமிடம் மூடி வைக்கவும். பின்பு அதை கிளறி இறக்கினால் உதிரியான உப்புமா தயாராகிவிடும்.

முக்கிய குறிப்பு:

உப்புமாவிற்கு எண்ணெய்  சற்று அதிகமாகவும் , தண்ணீரின் அளவு 1:2 இந்த அளவில் இருந்தால் சுவையாகவும் உதிரியாகவும் இருக்கும்.

author avatar
K Palaniammal
நான் பழனியம்மாள், இளங்கலை மனையியல் பட்டதாரியான நான் கடந்த ஆறு மாதங்களாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். லைஃப் ஸ்டைல், ஆன்மீகம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.