மதுரை வைகை ஆற்றில் வெள்ளம்: தரைப்பாலத்தில் மீது தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு.!

  • ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .
  • இதனால் மதுரையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் முக்கியமாக விளங்கும் தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது.

நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மதுரை வைகை அணையில் தற்போது வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அதிலும்  மதுரையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் முக்கியமாக விளங்கும் தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

வைகை அணையில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகளால் சாதாரணமாக வைகை அணையில் இருந்து திறக்கக்கூடிய தண்ணீர் மதுரைக்கு வரும் போது இந்த தடுப்பணைகள் தடுக்கப்படுவதால் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது . தற்போது மேம்பாலங்களில்  மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan