ஆக்சிஜன் பற்றாக்குறையால் உத்தராகண்ட் மாநிலத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி மருத்துவமனையில் ஐந்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் தினமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக் மறுக்கப்படுவதாலும், பலர் உயிரிழந்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 5 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த  நோயாளிகளில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்ததாகவும், மேலும் 4 பேர் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் கலெக்டர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal