உடற்தகுதி தான் முக்கியம், யோ-யோ டெஸ்ட் அல்ல- சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் உடற்தகுதி தான் முக்கியம், யோ-யோ உள்ளிட்ட பிற டெஸ்ட்கள் முக்கியமல்ல என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற, வீரர்களுக்கு யோ-யோ மற்றும் டெக்ஸா உள்ளிட்ட உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயம் இருக்கிறது, இதனை முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், யோ-யோ உள்ளிட்ட சோதனைகள் முக்கியமல்ல, சரியான உடற்தகுதியுடன் (ஃபிட்டாக) இருப்பதுதான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான அணியின் தேர்விற்கு முன்னதாக கவாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார். உடற்தகுதி என்பது தனிப்பட்ட ஒன்று, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உடற்தகுதி மாறுபடும், அதுபோல விக்கெட் கீப்பர்களுக்கு அதிகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சற்று குறைவாகவும் அது மாறுபடும்.

இதனால் உடற்தகுதி தான் முக்கியமே தவிர யோ-யோ சோதனையோ, டெக்ஸா சோதனையோ முக்கியமல்ல என்று கூறியிருக்கிறார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment