தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் – பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!

திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 200 நாட்டுப்படைகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைக்க கோரி கடந்த பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து மீனவர்கள் கூறுவையில், கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதால், மீன்பிடி தொழிலுக்கு சென்று விட்டு மீண்டும் கரைக்கு திரும்பும் போது படகுகளில் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், இங்கு தூண்டில் வளைவுபாலம் அமைத்து தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தூண்டில் வளைவு பாலம் அமைக்கக்கோரி அமலிநகர் மீனவர்கள் 10 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாளை (ஆக.17) சமாதான பேச்சுவார்த்தை நடத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.