மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி.! அமைச்சர் ஜெயக்குமார்.!

தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  உள்ளது . தற்போது 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மீன்பிடி விசைப் படகுகள், எந்திரம் பொருந்திய மற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் ஆகியவை அனைத்தும்  மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

 கடந்த மார்ச் மாதம் அறிவிப்பு ஒன்று மத்திய அரசு அறிவித்தது. அதில் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60 நாட்களுக்கும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 -ம் தேதி வரையிலான 60 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மீன்வளத்துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31-ஆம் தேதி வரை உள்ள 47நாள்களுக்கு,  மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31-ம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் விசைப்படகுகளுக்கு, 61 நாளிலிருந்து 47 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் நாட்டின், கிழக்கு கடற்கரைப்பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம்.
மேற்கு கடற்கரைப் பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk