வாரணாசியில் 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள்; பிரதமர் மோடி இன்று அடிக்கல்.!

வாரணாசியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவங்கிவைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் இன்று 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மோடி, தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் மூன்றாவது பொதுப் போக்குவரத்து ரோப்வேக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

முதற்கட்டமாக, நாட்டின் முதல் பொதுப் போக்குவரத்து ரோப்வே, கான்ட் முதல் காசியில் உள்ள கோடௌலியா வரை இயக்கப்படுகிறது. கோடௌலியா, காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தசாஷ்வமேத் காட் ஆகிய இடங்களுக்கு இந்த ரோப்வே போக்குவரத்து இயக்கப்படுகிறது.

பொலிவியா மற்றும் மெக்சிகோ சிட்டிக்கு அடுத்தபடியாக பொதுப் போக்குவரத்திற்கு ரோப்வே அமைக்கும் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கும். ரோப்வே திட்டம் வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் இருந்து கோடோவ்லியா வரை 645 கோடி ரூபாய் செலவில் 3.75 கிமீ தூரத்தில் கட்டப்படுகிறது.

சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். இவற்றில் பகவான்பூரில் 55 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இது நமாமி கங்கா திட்டத்தின் கீழ் 300 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், சிக்ரா ஸ்டேடியத்தின் மறுமேம்பாட்டின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் சுமார் 63 பஞ்சாயத்துகளில் மொத்தம் 19 குடிநீர் திட்டங்கள், மற்றும் கிராமப்புற குடிநீர் அமைப்பை மேலும் வலுப்படுத்த 59 குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதனையடுத்து “ஒன் வேர்ல்ட் காசநோய்” உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுவார் மற்றும் இந்தியாவின் வருடாந்திர காசநோய் அறிக்கை 2023ஐ பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment