முதல்முறையாக எம்.பி – யான பிரபல நடிகை!

நடிகை நவநீத் பிரபலமான நடிகையாவார். இவர் கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் பஞ்சாபி போன்ற 6 மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் அரசாங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில், அமராவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, இன்று பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

மும்பை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை நவநீத், ‘இந்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் பலர் வெற்றி பெற்று இருப்பதாகவும், அவர்கள் புதிய பார்வையுடன் செயல்படுவார்கள்.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment