அமெரிக்காவில் போராட்டக்காரர் மீது துப்பாக்கி சூடு.. 2 பேர் பலி.!

அமெரிக்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெனோஷா நகரில் ஜேக்கப் பிளேக் என்ற கருப்பின இளைஞரை போலீசார் 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். தற்போது, ஜேக்கப் பிளேக் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜேக்கப் பிளேக்கை துப்பாக்கியால் சுட்ட போலீசார்  கைது செய்ய வேண்டும், மற்ற போலீசாரை பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை   போலீசார் தடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால், போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு தடியடியும் நடத்தினர். அப்போது கூட்டத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில்,  துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்ததில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பேசும்பொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan