நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீங்க.? பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்.!

நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று கேள்வி கேட்டதற்கு லவ் போர் அடிக்கிறப்போ திருமணம் செய்து கொள்வோம் என்று பதிலளித்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது .

சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை கோவிலில் வைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தை நடத்துவதற்காக பல கோயில்களில் ஏறி இறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியது. ரசிகர்கள் பலர் விரைவில் திருமணம் செய்யுங்கள் என்று கூறி வரும் நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை கூறியுள்ளார். அதாவது காதல் போர் அடிக்கிறப்போ கல்யாணம் செய்து கொள்வோம் என்று பதிலளித்துள்ளார். இதிலிருந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் இந்த வருடம் இருக்காது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரண்டு காதல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.