அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : சென்னையில் 115 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனாலும் பல இடங்களில் அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தனர்.
இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 26 வழக்குகளும்,  புளியந்தோப்பு  உட்பட்ட பகுதியில் 30 வழக்குகளும் , பூக்கடை பகுதியில் ஐந்து வழக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தன்மையைப் பொறுத்து மூன்று வழக்கு  பதிவு செய்யப்பட்டு உள்ளது.வழக்கின் அடிப்படையில் ஆறு மாத சிறை தண்டனையும் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மேலும் புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தற்கு 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

author avatar
murugan