குழந்தை சுஜித்தின் உயிரை பறித்த ஆழ்துளை கிணறு மூடப்பட்டது!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து, பலரின் போராட்டத்திற்கும், எதிர்பார்ப்பிற்கு மத்தியில்,  குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இதனையடுத்து, உடனடியாக குழந்தையின் உடல் ஆம்புலன்ஸ் மூலமாக மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பின், குழந்தையின் உடல், நடுகாட்டுப்பட்டி, பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில், குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நல்லடக்கம் நடந்தபோது, குழந்தை சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறும், கான்கிரீட் கலவையால் மூடப்பட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.