குரங்கணி காட்டுத்தீ விபத்தில் தயார் நிலையில் 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள்!

தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் காட்டுத்தீ ஏற்பட்டது பற்றி  செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, திருப்பூரில் இருந்து 12 பேரும், சென்னையில் இருந்து 24 பேரும் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

குரங்கணி மலையில் காட்டுத்தீயில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைப்பகுதியாகும். குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாவுக்காக பலர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். மலைப்பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆண் மற்றும் பெண் உள்பட 25 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

தீயணைப்பு, வனத்துறை, வருவாய் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment