ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு சுமார் 4100 கோடி அபராதம்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமானது குழந்தைகளுக்கு தேவையான சோப், பவுடர், எண்ணெய், மருந்து உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது வலி நிவாரணிகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தி அதற்க்கு அடிமையாகும் வண்ணம் தயாரித்ததாக புகாரில் சிக்கி உள்ளது.

இந்த வழக்கு விசாரணை அமெரிக்க ஆக்லஹாமா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதே புகாரின் பேரில் பலர் அந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 4,100 கோடி ரூபாய் (572 மில்லியன் அமெரிக்க டாலர் ) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியான அந்நிறுவனம் ‘நாங்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளோம்’ என தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.