தமிழக அரசுக்கு கூடுதல் கடன் வாங்க.. நிதி அமைச்சகம் அனுமதி..!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதை, ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரு வாய்ப்புகளை வழங்கப்பட்டது. அதில், ஓன்று ரூ.97 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கியிடம், குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு வாய்ப்புகளை மத்திய அரசு வழங்கியது.

நேற்று 68,825 கோடி ரூபாய் கடன் பெற, 20 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி இழப்பீடு தற்போது அளிக்கப்படாததால் ரூ.9,627 கோடி கூடுதல் கடன் வாங்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது நிதி அமைச்சகம்.

author avatar
murugan